free website hit counter

ஆசிய கோப்பை டி20 - ஜடேஜா மற்றும் பாண்டியாவின் அதிரடியினால் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது.
இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்குள் நுழையும்.

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் 2-வது லீக் ஆட்டம் துபாயில் நேற்றிரவு நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 19.5 ஓவர் முடிவில் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
br> தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் 43 ரன்கள் அடித்து அவுட்டானார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஷாநவாஸ் தஹானி 6 பந்தில் 16 ரன்கள் எடுத்தார்.

இந்தியா சார்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டும், ஆவேஷ் கான் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கியது.

கே.எல்.ராகுல் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ரோகித் சர்மாவுடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். கோலி பொறுப்புடன் ஆடினார். இந்த ஜோடி 49 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா 12 ரன்னில் வெளியேறினார். அவரை தொடர்ந்து விராட் கோலி 35 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்து இறங்கிய ரவீந்திர ஜடேஜா நிதானமாக ஆடினார். சூர்யகுமார் யாதவ் 18 ரன்னில் அவுட்டானார்.

5-வது விக்கெட்டுக்கு ஆல்-ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜாவும், ஹர்திக் பாண்ட்யாவும் இணைந்து நம்பிக்கை தந்தனர். கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்ட போது, 19-வது ஓவரில் பாண்ட்யா 3 பவுண்டரியை விலாசினார்.

கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 7 ரன் தேவைப்பட்டது. இறுதி ஓவரை சுழற்பந்து வீச்சாளர் முகமது நவாஸ் வீசினார். இதில் முதல் பந்தில் ஜடேஜா (35 ரன், 29 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) போல்டு ஆனார். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் ஒரு ரன் எடுத்தார். 3-வது பந்தில் ரன் இல்லை. 4-வது பந்தை ஹர்திக் பாண்ட்யா அட்டகாசமாக சிக்சரை அடித்து வெற்றிபெற செய்தார்.

இறுதியில், இந்தியா 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. பாண்ட்யா 33 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

போட்டியின் ஆட்டநாயகனாக ஹர்திக் பாண்ட்யா தெரிவானார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula