free website hit counter

பாகிஸ்தான் சென்ற வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு!

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் பங்கேற்பதற்காக 26 பேர் கொண்ட மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி கடந்த டிசம்பர் 9-ஆம் திகதி விமானம் மூலம் பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகருக்கு சென்றது. 2018-ம் ஆண்டுக்கு பிறகு மேற்கிந்திய தீவுகள் அணி பாகிஸ்தான் செல்வது இதுவே முதல்முறையாகும். 

3 மாதங்களுக்கு முன்பு பாதுகாப்பு பிரச்சினையை காரணம் காட்டி நியூசிலாந்து அணி தனது பாகிஸ்தான் தொடரை கடைசி நேரத்தில் முறித்து கொண்டு களம் இறங்காமல் நாடு திரும்பியது. இதனால் பாகிஸ்தான் சென்றடைந்த மேற்கிந்திய தீவுகள் அணியினர் விமான நிலையத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் தாங்கள் தங்கும் ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது இருபது ஓவர் போட்டி கராச்சியில் கடந்த 13 திகதி தொடங்கியது. வெஸ்ட்இண்டீஸ் அணியில் 3 வீரர்கள் உள்பட 4 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர். 

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியில் 3 வீரர்கள் உள்பட 5 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் ஷாய் ஹோப், இடது கை சுழற்பந்து வீச்சாளர் அகேல் ஹொசைன், ஆல்ரவுண்டர் ஜஸ்டின் க்ரீவ்ஸ், உதவி பயிற்சியாளர் ரோடி எஸ்ட்விக் மற்றும் அணி மருத்துவர் டாக்டர் அக்ஷய் மான்சிங் ஆகிய 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

3 வீரர்களும் நடக்க இருக்கும் போட்டிகளில் இருந்து விலக்கப்படுவார்கள் என்றும் தொற்று பாதித்த 5 நபர்களும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ அதிகாரிகளின் கண்கானிப்பில் உள்ளனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula