free website hit counter

3 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் டாப் 100க்குள் இடம்பிடித்தார் ஆண்டி முர்ரே!

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
நெதர்லாந்தின் ரோட்டர்டேம் நகரில் நடைபெற்றுவரும்
ஏடிபி டென்னிஸ் தொடரின் 2ம் சுற்றுக்கு முன்னாள் உலக சாம்பியன் ஆண்டி முர்ரே முன்னேறி உள்ளார்.

நெதர்லாந்தின் ரோட்டர்டேம் நகரில் நடைபெற்றுவரும் ஏடிபி டென்னிஸ் தொடரின்  முதல் சுற்று ஆட்டத்தில் முன்னாள் உலக சாம்பியனான இங்கிலாந்து நாட்டின் ஆன்டி முர்ரே, உலக டென்னிஸ் தரவரிசையில் 31ம் நிலை வீரராக உள்ள கஜகஸ்தான் நாட்டின் அலெக்சாண்டர் பூப்ளிக் உடன் மோதினார். இந்த போட்டியில், அவர் 7-6 (8/6), 6-4 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் பூப்ளிக்கை தோற்கடித்தார்.

இதன்மூலம் ரோட்டர்டேம் டென்னிஸ் தொடரின் 2வது சுற்று ஆட்டத்திற்கும் அவர் தகுதி பெற்றார்.

மேலும், உலக டென்னிஸ் தரவரிசையில் 2018ம் ஆண்டுக்கு பின், முதன் முறையாக டாப் 100 இடத்துக்குள் வந்துள்ளார். தற்போது அவர் டென்னிஸ் தரவரிசையில் 95வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

அவர் அடுத்த போட்டியில் உலகின் 3ம் நிலை வீரரான கனடாவை சேர்ந்த பெலிக்ஸ் ஆகர்-அலியாசிமை எதிர்கொள்ள உள்ளார்.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: