யூ.ஜி.சி. நெட் தேர்வு வருகின்ற ஜூன் மாதம் நடைபெறும் என பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் அறிவித்துள்ளார்.
பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட சேவை கட்டணமாக ரூ.150 வசூலிக்க தனியார் மையங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
ஒடிசாவில் ஏவுகணைகளுக்கான திட எரிபொருள் ‘பூஸ்டர்’ பரிசோதனை வெற்றிபெற்றதாக டி.ஆர்.டி.ஓ. தெரிவித்துள்ளது.
இ-சைக்கிள் வாங்கும் முதல் 10,000 பேருக்கு தலா ரூ.5,500 மானியமாக வழங்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடத்திலும், அதானி இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.
தேசிய பாதுகாப்பு குறித்து தவறான தகவல்களை பரப்பி வருவதால் 22 யூ-டியூப் சேனல்களை முடக்கியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த நிதி ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி ரூ.31 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.