கர்நாடகா சட்டசபைக்கான தேர்தல், 224 தொகுதிகளில் கடந்த 10ம் திகதி தேர்தல் நடைபெற்றது. கர்நாடகாவில் ஆட்சியிலிருந்த பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி முதலிய பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன.
தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில் 136 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இந்த அதிரடி வெற்றி மூலம், கர்நாடாகாவில் அறுதிப் பெரும்பாண்மையுடன் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுகிறது. ஆட்சியிலிருந்து பா.ஜ.க 64 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடகத்தில் பாஜக ஆட்சியை இழக்கிறது.
கடந்த தேர்தலில் 104 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த பாஜக இம்முறை தேர்தலில் பெரும் சரிவினைச் சந்தித்துள்ளது. இத்தேர்தலில் போட்டியிட்ட மதச்சார்பற்ற ஜனதா தளம் 20 தொகுதிகளிலும், ஏனைய இடங்களில் மற்றைய கட்சிகளில் சிலவும் வெற்றிபெறுகின்றன. கர்நாடகாவில் பெரும்பாண்மைபலம் பெற்று காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றியைத் காங்கிரஸ் கட்சியினர் பரவலாகக் கொண்டாடி வருகின்றனர். கர்நாடகாவின் தேர்தல் வெற்றி தமிழகத்திலும் எதிரொலிக்கிறது.