இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் சமீபத்தில் வெற்றிகரமாக பல கப்பல் எதிர்ப்பு ஏவுகணைச் சோதனைகளை நடத்தியதாக கடற்படையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கடற்படை செய்தித்தொடர்பாளர் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய கடற்படை கப்பல்கள் நீண்ட தூர தாக்குதல், தாக்குதல்களுக்கான தளங்கள், அமைப்புகள் மற்றும் துருப்புகளுக்கான தயார் நிலையை மறுபரிசீலனை செய்து நிரூபிக்கும் வகையில், பல்வேறு சோதனைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன தெரிவித்துள்ளார்.
எந்த இடத்திலும், எந்த நேரத்திலும், எந்த வகையிலும் நாட்டின் கடல்சார் நலன்களை பாதுகாப்பதில் இந்திய கடற்படை நம்பகத்தன்மையுடன், அக்கறையுடன் தயார் நிலையில் உள்ளது என்றும் இந்திய கப்பற்படையின் சமீபத்திய உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஏவுகணை எதிர்ப்பு கப்பலான ஐஎன்எஸ் சூரத்-ன், நகரும் கடல்கள் இலக்குகளை துல்லியமாக தாக்கும் சோதனை வெற்றி, நமது பாதுகாப்பு திறனை வலுப்படுத்துவதின் மற்றொரு மைல் கல்லைக் குறிக்கிறது எனவும் கடற்படை எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்தச் சாதனை உள்நாட்டு போர்க்கப்பல் வடிவமைப்பு, வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளில் இந்திய கடற்படையின் வளர்ந்து வரும் திறமையை நிரூபிக்கிறது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.