கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக தமிழகம் முழுவதும் விநாயகர் சதூர்த்தி அன்று சிலை பிரதிஷ்டை செய்யவும், ஊர்வலம் செல்லவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில் சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி கட்டுப்பாடு குறித்து கோட்டாட்சியர் நாராயணன் இந்து அமைப்புகளின் நிர்வாகிகளுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார்.
அரசின் தடை ஆணை குறித்து கோட்டாட்சியர் நாராயணன் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் லாமேக் ஆகியோர் விளக்கமளித்தனர்.
அதனை ஏற்க மறுத்த இந்து அமைப்பினர்,
"பேருந்து ,பள்ளிக்கூடம் ,திருமண மண்டபங்கள் ,மதுக்கடைகள் வரை இயங்கும்போது கொரோனாவை காரணமாக கொண்டு விநாயகர் சதூர்த்தியை தடை செய்வது ஏற்க கூடியதாக இல்லை.
தடை குறித்து தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். அரசு மறுபரிசீலனை செய்து அனுமதி வழங்க மறுத்தால் தடையை மீறி மாவட்டத்தில் 200 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும்" என எச்சரித்துவிட்டு கலைந்து சென்றனர்