நமது ஆட்சி , சுத்தமான தூய்மையான அரசாக இருக்கும் என்றும் ஆட்சியில் ஊழல், குற்றவாளிகள் இருக்க மாட்டார்கள் எனவும் கோவையில் நடந்த கருத்தரங்கில் அக்கட்சி தலைவர் விஜய் பேசினார்.
தவெக வெறும் அரசியல் ஆதாயத்திற்காக துவங்கப்பட்ட ஒரு கட்சி கிடையாது எனவும் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் தெரிவித்தார். நமது ஆட்சி , சுத்தமான தூய்மையான அரசாக இருக்கும் என்றும் எந்தவித தயக்கமும் இல்லாமல், தைரியமாக நம்முடைய ஓட்டுச்சாவடி முகவர்கள் மக்களை அணுக வேண்டும் எனவும் விஜய் கூறினார்.
மக்களுக்காக சேவை செய் என அண்ணாதுரை கூறியதை நீங்கள் புரிந்து கொண்டு நீங்கள் செயல்பட்டால், சிறுவாணி தண்ணீர் போன்று சுத்தமான ஆட்சியாக அமையும் எனவும் இன்னும் வலிமையாக சொல்ல வேண்டும என்றால், தவெக ஆட்சி ஒரு தெளிவான ஒரு உண்மையான ஒரு வெளிப்படையான நிர்வாகம் செய்யக்கூடிய ஆட்சியாக அமையும் என்றும் விஜய் தெரிவித்தார். தவெக வெறும் சாதாரண ஒரு அரசியல் கட்சி அல்ல என குறிப்பிட்ட அவர், தவெக ஒரு புரட்சிகரமான பேரணி எனவும் விஜய கூறினார்.