தபேலா மேஸ்ட்ரோ என மகிக்கப்பெற்ற உஸ்தாத் ஜாகிர் உசேன் (73 வயது )இன்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 15) அமெரிக்காவில் காலமானார்.
ஹுசைன் இதயநோய் பிரச்சனைகள் காரணமாக Iகடந்த ஒரு வாரமாக தீவிரசிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பெற்று, சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானதாக அறிவிக்கபட்டிருக்கிறது.
பழம்பெரும் தபேலா கலைஞரான உஸ்தாத் அல்லா ரக்கா கானின் மகனான ஜாகீர், இந்திய மற்றும் உலகளாவிய ரீதியில் இசைத்துறையில் புகழ்பெற்றவராக இருந்தார். ஏழு வயதில் தபேலா வாசிக்கத் தொடங்கிய அவர், வாழ்நாள் முழுவதும், இந்திய பாரம்பரிய மற்றும் உலக இசைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தார்.
தனது குடும்பத்துடன் சான் பிரான்சிஸ்கோவில் வசித்து வந்த அவர், உலகளாவிய ரீதியில் தனது மேம்பட்ட தபேலா திறமைகளை வெளிப்படுத்தி, இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்களுக்கு இசையமைத்து பாரட்டுக்களைப்பெற்றிருந்தார்.
இந்திய அரசு 1988 இல் பத்மஸ்ரீ, 2002 இல் பத்ம பூஷன் மற்றும் 2023 இல் பத்ம விபூஷன் விருதுகளை வழங்கி கௌரவித்தது. 1990 ஆம் ஆண்டில், இசையில் இந்தியாவின் மிக உயர்ந்த அங்கீகாரமான சங்கீத நாடக அகாடமி விருதையும் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. இவை தவரி உலகளாவிய பல்வேறுவிருதுகளும் பெற்ற இசைமேதையாக வாழ்ந்து மறைந்திருக்கின்றார் ஜாகீர் உசேன்.