free website hit counter

Sidebar

07
தி, ஏப்
55 New Articles

ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் அதிகரிப்பு - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக்குழு 2 மாதங்களுக்கு ஒருமுறை கூடி, தன் கொள்கையை வகுக்கும்.
அந்தவகையில் ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு கொடுக்கும் குறுகிய கால கடனுக்கு விதிக்கும் வட்டி 'ரெப்போ ரேட்' என்று அழைக்கப்படுகிறது. கடந்த மே மாதம் 4-ந்தேதி கூடிய ரிசர்வ் வங்கியின் 6 பேர் கொண்ட நிதி கொள்கைக்குழு, 4 சதவிகிதமாக இருந்த 'ரெப்போ ரேட்' விகிதத்தை 40 புள்ளிகள் (0.4 சதவிகிதம்) உயர்த்தி வட்டி விகிதத்தை 4.40 சதவிகிதமாக உயர்த்தியது.

இதனை தொடர்ந்து ஜூன் 8-ம் தேதி மீண்டும் கூடிய இந்தக்குழு, ரெப்போ ரேட் வட்டியை மேலும் 0.50 சதவிகிதம் உயர்த்தியது. இதன் மூலம் ரெப்போ வட்டி விகிதம் 4.9 சதவிகிதமாக நிலவி வந்தது.

இந்நிலையில், ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி இன்று மேலும் உயர்த்தியுள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரெப்போ வட்டி விகிதம் மேலும் 0.5 சதவிகிதம் உயர்த்தப்பட்டுவதாக அறிவித்தார். இதன் மூலம் ரெப்போ வட்டி விகிதம் 5.40 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

ரெப்போ வட்டி விகிதம் 5.40 ஆக அதிகரித்துள்ளதால் வீட்டுக்கடன், வாகன கடன், தனி நபர் கடன் வாங்குபவர்களுக்கும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தங்கள் தேவைக்காக கடன் வாங்கும்போது இனி கூடுதலாக வட்டி கட்ட வேண்டும். ஏற்கனவே கடன் வாங்கியவர்கள் சுழற்சி விகிதத்தில் கடன் வாங்கியிருந்தால் இனி மாத தவணை கட்டணம் உயரும் அல்லது தவணை ஆண்டுகள் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula