இந்திய மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டிக்கும் வகையில், வரும் 20 ந் திகதி தமிழகம் முழுவதும் கண்டனப் போராட்டம் நடத்துவதற்கு தமிழக ஆளுங்கட்சியான திமுக அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான அறிவிப்பினை, தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேளாண் சட்டங்கள், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, தனியார்மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து போராட்டம் நடத்த தேசிய அளவிலான எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத் தீர்மானத்திற்கமைவாக, வரும் 20ந் திகதி காலை 10 மணியளவில் தி.மு.க. நிர்வாகிகள், தங்களின் இல்லம் முன்பாக கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டன போராட்டத்தில், கூட்டணி கட்சியினருடன் இணைந்து தி.மு.க.வினர் ஈடுபட வேண்டும் என்றும், மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து மதச்சார்பற்ற ஜனநாயக இந்திய குடியரசை பாதுகாப்போம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்து.