தமிழ்நாட்டின் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கடந்தமாதம் நடத்திய சோதனையில் சிக்கிய பெண் அதிகாரிக்கு,
புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
பொதுப்பணித் துறையில், வேலுார் மாவட்ட தொழில்நுட்ப கல்விப் பிரிவுவில் செயற்பொறியாளராக பணியாற்றி வருபவர் 58 வயது ஷோபனா.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள இவரது வீடு மற்றும் அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கடந்த 3-ஆம் தேதி சோதனை நடத்தினர்.
அப்போது, 2.27 கோடி ரூபாய் ரொக்கம், தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள், பினாமி பெயரிலான சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. இதையடுத்து கைது செய்யப்பட்ட ஷோபனா பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். 15 நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தார்.
இந்நிலையில், ஷோபனா திடீரென பதவி உயர்வுடன் கூடிய பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மண்டல பொதுப்பணித் துறையில், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு துணை கண்காணிப்பு பொறியாளராக பதவி உயர்வு வழங்கி இவர் மீண்டும் அரசுப்பணியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த உத்தரவை, பொதுப்பணித் துறை செயலர் தயானந்த கட்டாரியா பிறப்பித்துள்ளார். இதுகுறித்து தமிழக ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை.