free website hit counter

ஜனாதிபதி திரவுபதி முர்மு சென்னை வருகை

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
சென்னைக்கு 2 நாள் பயணமாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வந்தார்.
நாளை நடைபெறும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கவுரவிக்க உள்ளார். இதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக இன்று சென்னை வந்தடைந்தார்.

சென்னை வந்துள்ள ஜனாதிபதி திரவுபதி முர்முவை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் அமைச்சர்கள் நேரில் சந்தித்து வரவேற்றனர்.

அப்போது, மணிமேகலை புத்தகத்தின் ஆங்கில பதிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனாதிபதி திரவுபதிக்கு வழங்கினார். மேலும், டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளும் ஜனாதிபதிக்கு வரவேற்பளித்தனர்.

இதனை தொடர்ந்து, ஜனாதிபதி திரவுபதி முர்மு சாலை மார்க்கமாக கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்றார்.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: