அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை எதிர்கொள்ளும் தைரியம் பிரதமர் நரேந்திர மோடிக்கு இல்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் விமர்சித்துள்ளார்.
பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவரும் நிலையில், நாளந்தாவில் தேர்தல் பேரணியில் ராகுல்காந்தி உரையாற்றினார்.
பிகார் இப்போது வினாத்தாள் கசிவுகள், மோசமான சுகாதார உள்கட்டமைப்புக்கு ஒத்ததாக மாறிவிட்டது என்று குற்றம் சாட்டினார்.
அமெரிக்க அதிபர் பலமுறை கூறியது என்னவென்றால், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் நின்றதற்கு அவரே காரணம் என்று. ஆனால், நமது பிரதமருக்கு அவரை எதிர்கொள்ளும் தைரியம் இல்லை என்று விமர்சனம் செய்துள்ளார்.
பிகாரில் நிலம் இல்லை என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்தை விமர்சித்த ராகுல்காந்தி, மாநில அரசால் ஒரு தொழில்துறை நிறுவனத்திற்குக் குறைந்த விலையில் நிலங்கள் வழங்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.
கடந்த மக்களவைத் தேர்தலின்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி வாக்குத் திருட்டு மூலம் அரசு அமைத்தது.
அம்பேத்கர் வடிவமைத்த அரசியலமைப்பை அழிக்கத் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் பிரதமரும் தீவிரமாக உள்ளனர்.
பிகாரில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அது விவசாயிகள், தொழிலாளர்கள், தலித்துகள் மற்றும் பலவீனமான பிரிவினரின் அரசாக இருக்கும் என்றும், அனைத்து சமூகங்களின் பிரதிநிதித்துவத்தையும் கொண்டதாக இருக்கும் என்றும் காங்கிரஸ் தலைவர் கூறினார்.
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் உலகின் சிறந்த பல்கலைக்கழகம் நாளந்தாவில் அமையும் என்றும் அவர் கூறினார்.
