ரக்ஷா பந்தன் பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் மிகப் பழமையான பண்டிகைகளில் ரக்ஷா பந்தன் ஒன்று ஆகும்.
சகோதரிகள் சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டி, சகோதரத்துவத்தைக் வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் பண்டிகை திருநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், பிரதமர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் குழந்தைகளுடன் பிரதமர் மோடி ரக்ஷா பந்தன் பண்டிகையை கொண்டாடினார்.
துப்புரவு பணியாளர்கள், பியூன்கள், தோட்டக்காரர்கள், டிரைவர்கள் உள்பட பிரதமர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் குழந்தைகளுடன் இந்த சிறப்பு ரக்ஷா பந்தனை பிரதமர் கொண்டாடினார். குழந்தைகள் பிரதமர் மோடியின் கைகளில் ராக்கி கயிறு கட்டி அவரிடம் ஆசி பெற்றனர்.
பிரதமருக்கு சிறுமிகள் ராக்கி கட்டும்போது எடுக்கப்பட்ட வீடியோவை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.