செந்தில்பாலாஜி வழக்கில் எதையும் மறைக்கக்கூடாது என்றும் அனைத்து ஆவணங்களையும் அமலாக்கத்துறை தாக்கல் செய்ய வேண்டும்.
இதையடுத்து இரு தீர்ப்பில் எது சரியானது என்பதை முடிவு செய்ய 3-வது நீதிபதியாக சி.வி. கார்த்திகேயனை நியமித்து, ஐகோர்ட்டு தலைமை நீதிபதி உத்தரவிட்டார். இதன்படி, இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில்பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, இந்த வழக்கில் மூத்த வக்கீல் கபில்சிபில் ஆஜராக உள்ளதால், விசாரணையை 11-ந்தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தார். அமலாக்கத்துறை சார்பில் ஆஜராக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த வழக்கில் நீண்ட வாதங்கள் நடத்தி வழக்கை இழுத்தடிக்க அனுமதிக்கக்கூடாது என்றார்.
இந்த மனுவை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளதை கருத்தில் கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டிய நீதிபதி கார்த்திகேயன், இரு நீதிபதிகளும் எந்த கருத்தில் முரண்பட்டு இருக்கிறார்கள் என்பது குறித்த விவரங்களை மனுவாக தாக்கல் செய்யும்படி இருதரப்புக்கும் அறிவுறுத்தினார்.
இதற்காக வழக்கின் விசாரணையை சனிக்கிழமைக்கு தள்ளி வைத்த நீதிபதி, ஜூலை 8ம் தேதி வழக்கை விசாரிக்க தலைமை நீதிபதியின் அனுமதியைப் பெறும்படி பதிவுத்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார். பின்னர் நீதிபதி, செந்தில் பாலாஜி அதிகாலை 1.39 மணிக்கு கைது செய்ததாக கூறப்படுகிறது. எனவே, இந்த வழக்கின் புலன் விசாரணை ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில் எதையும் மறைக்கக்கூடாது. அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என அமலாக்கத் துறை தரப்புக்கு அறிவுறுத்தியுள்ளார்.