free website hit counter

பிகாரில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறது தேசிய ஜனநாயகக் கூட்டணி!

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 203 இடங்களில் வெற்றி/முன்னிலை பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதை உறுதி செய்திருக்கிறது.

இதன் மூலம் பாஜக மற்றும் ஜனதா தளம் இணைந்து பிகாரில் மீண்டும் ஆட்சியமையவிருக்கிறது என்பது தெளிவாகிறது.

243 தொகுதிகளைக் கொண்ட பிகார் சட்டப்பேரவைக்கு, 122 தொகுதிகளில் பெரும்பான்மை பெற வேண்டிய நிலையில், ஐக்கிய ஜனதா தளம், பாஜக மற்றும் இதர கட்சிகளின் கூட்டணி இணைந்து 203 தொகுதிகளில் வெற்றி/முன்னிலை வகித்து, பிகாரில் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாஜக மட்டும் 91க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி/முன்னிலைையில் உள்ளது.

பிகாரில் நடந்த பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி வருகின்றன. வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது முதலே தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலையில் உள்ளது. மாலை 7 மணி நிலவரப்படி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜனதா தளம் 84 தொகுதிகளிலும், பாஜக 91 தொகுதிகளிலும் இதர கட்சிகள் 28 தொகுதிகளிலும் வெற்றி/முன்னிலை பெற்று சுமார் 203 தொகுதிகளில் தொடர்ந்து வெற்றி/முன்னிலை வகித்து வருகின்றன.

எனவே, பிகாரில், மீண்டும் பாஜக - ஜனதா தளம் கூட்டணி தலைமையிலான ஆட்சியமையப் போகிறது என்பது தற்போதைய நிலவரப்படி உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula