லக்னோ மெட்ரோ ரயில் நிலையத்தில் குரங்குகளின் அட்டகாசத்தை தடுக்க
லங்கூர் குரங்குகளின் கட் அவுட்களை ஆங்காங்கே வைத்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநில லக்னோவில் மெட்ரோ ரயில் நிலையங்களின் குரங்குகளின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் இருந்துள்ளது. மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் உடைமைகளை எடுத்து சென்றுவிடுகின்றன. குரங்குகளின் அட்டகாசம் காரணமாக மெட்ரோ ரயில் நிலைய ஊழியர்களும், பயணிகளும் அச்சத்தில் இருந்தனர். மெட்ரோ ரயிலில் குரங்குகள் ஏறாமல் தடுக்க, ரயில் நிலையத்தில் லங்கூர் வகை குரங்கு பொம்மைகளும் அவை அலறும் ஒலியும் ஒலிபரப்பப்படுகிறது.
மெட்ரோ ரயில் நிறுவனம் எடுத்த இந்த முயற்சி ஒரளவுக்கு அவர்களுக்கு பலனை அளித்துள்ளது. பாட்ஷா நகர் ரயில்நிலையத்தில் குரங்கு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனை கண்டு குரங்குகள் வராமல் உள்ளதாகவும், ஆக்ரோஷமான குரங்கின் ஒலியும் சேர்த்து ஒலிக்கும்போது, குரங்குகள் நுழைவது தடுக்கப்படுவதாகவும் மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.