இந்தியாவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையேற்றம் தொடர்பில், மேற்கு வங்காள முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நாட்டின் பல பகுதிகளில் பெற்றோல், டீசல் முதலான எரிபொருட்கள், லிட்டர் ரூ.100 ஐ கடந்து விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், முதல் அத்தியாவசிய சேவைகள் புரிபவர்கள் பலரும், இதனால் பாதிப்புக்குள்ளாகின்றார்கள். ஆகவே பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு விடுத்த கோரிக்கை மனுக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் மம்தா பானர்ஜி.
இதேவேளை, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வரும் 10,11ம் திகதிகளில், மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி தர்ணா போராட்டம் நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.