2020 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் இன்று 12வது நாளாக நடைபெற்றுவருகிறது. இதில் பங்கேற்று வரும் இந்திய வீரர்கள் தங்களது முழுத்திறமையையும் காட்டிவருகின்றனர்.
இந்நிலையில் பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இந்தியாவின் லவ்லினா டோக்கியோ ஒலிம்பிக்கி பெண்களுக்கான குத்துச்சண்டை 'வெல்டர் வெயிட்' எடைப் பிரிவு (69 கிலோ) அரையிறுதியில் நடப்பு உலக சாம்பியன் துருக்கியின் புசனெஸ் சர்மெனெலி மோதினார். இதில் துருக்கி வீராங்கனையிடம் 0-5 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். எனினும் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றிக்கொண்டார். இது இந்தியாவுக்கு கிடைத்த 3வது பதக்கமாகும்.
இந்நிலையில் இன்று டோக்கியோ ஒலிம்பிக் முக்கிய போட்டிகளில் இந்திய வீரர்கள் விளையாடவுள்ளனர். இதில் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டிக்கு இந்திய வீரர் நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பிலேயே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
அதேவேளை மல்யுத்தப்போட்டியின் 86 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் தீபக் புனியா அரையிறுதிக்குள் நுழைந்துள்ளதுடன் அமெரிக்க வீரர் டேவிட் மாரிஸ் டெய்லர் என்பவரைச் சந்திக்கிறார்.
மல்யுத்தப்போட்டியில் 59 கிலோ எடை ( பிரீ ஸ்டைல்) பிரிவில் இந்திய வீரர் ரவிகுமார் தாஹியா இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றார். இப்போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீரர் சனாயேவ்வை எதிர்கொள்ளவிருப்பது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் போட்டியாக டோக்கியோ ஒலிம்பிக் பெண்களுக்கான ஹாக்கி போட்டியின் அரை இறுதியில் இந்தியா அர்ஜென்டினா மோதல் மாறியிருக்கிறது.