இந்தியாவின் நெருக்கடியான கொரோனா தொற்றுநோய் சூழலில் மாநில அரசாங்கங்களே கோவிட் 19 தடுப்பூசிகளை வாங்கவேண்டும் என மத்திய அரசு வலியுறுத்துவது, இந்திய நாட்டின் கூட்டாட்சி கொள்கைக்கு எதிரானதுஎன ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.
"போலியோ உள்ளிட்ட அனைத்து நோய்த்தடுப்பு திட்டங்களுக்கும் மத்திய அரசிடமிருந்தே இலவசமாகவே மாநில அரசுகள் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளன . ஆனால் கொரோனா தடுப்பூசிகளை மாநிலங்களே சொந்தமாக வாங்கவேண்டும் என கட்டாயாப்படுத்தப்படுவது சுதந்திர இந்திய வரலாற்றில் இதுவே முதல் தடவை. " என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் எழுதிய கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது கடிதத்தில், மேலும் குறிப்பிடுகையில், " தேசம் முழுவதும், ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனா நெருக்கடியில் போராடி வரும் சவாலான சூழ்நிலையில், மத்திய அரசு இவ்வாறு சொல்வது கூட்டாட்சி கொள்கைக்கு எதிரானது"என்று காட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.
மேலும், தடுப்பூசி முன்னுரிமைகளை வரையறுப்பதை மாநில அரசுகள் கவனித்துக் கொண்டாலே, முழுமையான தடுப்பூசி இலக்கை சரியான நேரத்தில் அடைய உதவும். அதுவே மூன்றாவது அலையை திறம்பட சமாளிப்பதற்கான வழி. எனவும் குறிப்பிட்டுள்ள அவர், இதுபோன்ற கடினமான காலங்களில் நாட்டின் பிரதமரான உங்களதும், மத்திய அரசினதும் ஆதரவு தேவை என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.