free website hit counter

இந்தியா தலைமையில் இயங்குள்ள ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஆகஸ்ட் 1 திகதியான இன்றுமுதல் இந்தியா தலைமையில் ஐ.நா கவுன்சில் செயற்படவுள்ளது.

ஆகஸ்ட் மாதத்திற்கான நியூயார்க்-ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்று செயற்பட இருப்பதாக; ஐ.நா.,வுக்கான இந்திய துாதர் திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி 1 முதல் ஐ.நா அமைப்பின் அதிகாரமிக்க பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக தெர்வு செய்யப்பட்டு முதல் உறுப்பு நாடாக இந்தியா அங்கம் வகித்து வருகிறது. இந்தியா உள்பட மொத்தம் 10 நாடுகள் இந்த கவுன்சிலில் தற்காலிக உறுப்பினர்களாக உள்ளதுடன் இந்தியாவின் இரண்டு ஆண்டு உறுப்பினர் பதவி 2022 ஆண்டு நிறைவடைகிறது.

இந்நிலையில் சுழற்சி முறையில் கவுன்சிலில் அங்கம் வகிக்கும் நாடுகள்; ஒவ்வொரு மாதமும் கவுன்சிலை தலைமை தாங்கி வருகிறது, அவ்வகையில் முதன்முறையாக ஆகஸ்ட் மாதமான இன்று முதல் இந்தியா தலைமை தாங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதன் தொடர்பில் ஐ.நா.,வுக்கான இந்திய துாதர் திருமூர்த்தி வெளியிட்ட காணொளியில் தெரிவித்துள்ளார். அதில் : ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஆகஸ்ட் மாதம் முழுவதும் இந்தியா தலைமையில் இயங்கும். இதன்போது கடல்சார் பாதுகாப்பு, அமைதி பராமரிப்பு, பயங்கரவாத தடுப்பு ஆகிய மூன்று முக்கிய அம்சங்களுக்குமுன்னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, 2022 டிசம்பரில் மீண்டும் இப்பொறுப்பு இந்தியாவிற்கு வழங்கப்படும்.

இதேவேளை இந்தியா தனது 75வது சுதந்திரத்தை காணவிருக்கும் வேளையில் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தற்காலிக உறுப்பினராக இரு ஆண்டுகள், இரு முறை தலைமை பொறுப்பு ஆகியவற்றை வகிக்க இருப்பது பெருமையாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula