இந்தியாவில் கடுமையாக உள்ள கொரோனா தொற்றின் 2வது அலை நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை கத்தார் அரசு அனுப்பி வைத்துள்ளது.
கத்தார் நாட்டில் இருந்து இன்று அதிகாலை விமானம் மூலமாக 4,300 ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள், 200 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் 40 வெண்டிலேட்டர்கள் இந்தியாவிற்கு வந்து சேர்ந்துள்ளன. இதற்கு முன், கத்தார் நாட்டில் இருந்து கப்பல் மூலம் 40 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன், 2 திரவ ஆக்சிஜன் கன்டெய்னர்கள் மற்றும் 230 ஆக்சிஜன் சிலிண்டர்களும் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.
இதேபோல் , அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவிற்குத் தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்கள், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட கொரோனா சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் என்பவற்றை அனுப்பி வருகின்றன.