இந்தியாவில் ஜி.எஸ்.டி எனும் ஒரே வரி முறை திட்டம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து 66 கோடிக்கும் அதிகமாக ஜி.எஸ்.டி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் சரக்குகள் மற்றும் சேவை வரி ஆகியவற்றுக்கான கூடுதல் வரிகளை ஒழித்து ஒரே வரித்திட்டமாக ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்டது. 2017ஆம் ஆண்டு ஜுலைமாதம் தொடங்கப்பட்ட இத்திட்டம் நான்கு ஆண்டுகள் நிறைவு செய்யப்பட்டு ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்த வைப்பதையொட்டி மத்திய நிதியமைச்சகம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் :
எளிமையாக்கப்பட்ட ஜி.எஸ்.டி., நடைமுறையில் வர்த்தகர்கள்; வணிக நிறுவனங்கள் சுலபமாக வரி செலுத்துகின்றனர். மக்கள் செலுத்தும் வரிகள் குறைக்கப்பட்டுள்ளதால் வரி செலுத்துவோருக்கு பாரமும் குறைந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில், 1.30 கோடி பேர் ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்துள்ளனர். 66 கோடிக்கும் மேற்பட்ட ஜி.எஸ்.டி., கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பிரதமர் நரேந்திர மோடி ஜிஎஸ்டி அமல்படுத்தி 4 ஆண்டுகள் நிறைவடைந்ததை தனது டுவிட்டர் பக்கத்தில் சுலபமாக மக்கள் வரி செலுத்துவது வசூலிப்பது போன்றவை ஜி.எஸ்.டி நடைமுறை செயல்படுத்துகிறது. இந்திய பொருளாதாரத்தில் முக்கிய மைல்கல்லாக, ஜி.எஸ்.டி., அமலாக்கம் உள்ளது.' எனப் பதிவிட்டுள்ளார்.