இளநிலை மருத்துவப் படிப்பில் (எம்பிபிஎஸ்) சேர, நீட் நுழைவுத் தேர்வு எழுதுவதற்கான வயது உச்சவரம்பு குறித்து தேசிய மருத்துவ ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
>br> நீட் தேர்வு எழுதுவதற்கான வயது உச்சவரம்பு இனி இல்லை என்று ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது. ஆணையத்தின் இந்த அறிவிப்பை குடியுரிமை மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. 'நீட் தேர்வு எழுத அதிகபட்ச வயது வரம்பு 25-ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது அது நீக்கப்பட்டுள்ளது. தேசிய மருத்துவ ஆணையத்தின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
>br> நாட்டில் ஏற்கெனவே மருத்துவர்கள் பற்றாக்குறை இருந்துவரும் நிலையில், இந்த நடவடிக்கை மூலம் அதிகம் பேர் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும். நாட்டில் அதிக மருத்துவர்களை உருவாக்க இயலும் என்று அந்த கூட்டமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.