free website hit counter

இனி வாட்ஸ்ஆப் வாயிலாக மத்திய அரசு சேவைகள்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
கல்விச் சான்றிதழ், ஆதாா் அட்டை, ஓட்டுநா் உரிமம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்களை டிஜிட்டல் முறையில் சேகரித்து வைப்பதற்கான வசதிகளை டிஜிலாக்கர் என்ற செயலி வழங்கி வருகிறது.
இந்நிலையில் அச்செயலி வழங்கும் சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே மக்கள் பெற முடியும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது தொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சீரான நிா்வாகத்தை உறுதிசெய்யும் நோக்கில் அரசின் சேவைகள் இணையவழியில் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி செயலியில் பான் கார்டு, ஓட்டுநா் உரிமம், வாகனப் பதிவு சான்றிதழ், காப்பீட்டுச் சான்றிதழ், சிபிஎஸ்இ பொதுத்தோ்வு மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்டவற்றை டிஜிட்டல் வடிவில் சேகரித்து வைத்துக்கொள்ள முடியும்.

அச்சேவைகளை வாட்ஸ்ஆப் வாயிலாகப் பெற 9013151515 என்ற எண்ணுக்கு ‘Hi' என்று மெசேஜ் அனுப்ப வேண்டும். இதன் மூலமாக அரசின் சேவைகளை மக்கள் எளிதில் பெற்றுவிட முடியும்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula