தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மரபணு பகுப்பாய்வு கூடத்துக்கு மத்திய அரசு
அங்கீகாரம் அளித்துள்ளது. முதல்முறையாக தமிழகத்தில் மாநில அளவிலான மரபணு பகுப்பாய்வு கூடம் அமைக்கப்பட்டது.
சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள அதனை கடந்த செப்டம்பரி்ல முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில், மரபணு பகுப்பாய்வு கூடத்துக்கு மத்திய அரசு தற்போது அங்கீகாரம் அளித்துள்ளது.
ஒமைக்ரான் உள்ளிட்ட உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்பதை கண்டறிய, ஹைதராபாத் மற்றும் பெங்களூருவில் உள்ள மத்திய அரசின் சோதனை மையங்களுக்கு மாதிரிகள் அனுப்பப்படுவதால் முடிவுகள் வருவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், இனி மாதிரிகளை தமிழ்நாட்டிலேயே பகுப்பாய்வு செய்து, முடிவுகளை எளிதில் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.