ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் சுப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவத்தில் 28க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும் 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தோருக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே சம்பவம் குறித்து அறிந்த அம்மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்தார். தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா கண்டனம் தெரிவித்து பயங்கரவாத செயலில் ஈடுபட்டவர்களுக்கு பின் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று கூறினார்.
இந்த நிலையில் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதற்கு இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு,இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் எனவும் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு என்னுடைய இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த சிலர் காயமடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு உதவும் வகையில், புதுடில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் இயங்கும் சிறப்பு உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.