free website hit counter

நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல் உள்ளிட்டோருக்கு எதிராக டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

"நேஷனல் ஹெரால்டு " பணமோசடி வழக்கை காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜக கையில் எடுத்துள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

நேஷனல் ஹெரால்டு என்ற பத்திரிகையை, ஏ.ஜே.எல்., எனப்படும் " அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் " நிறுவனம் நடத்தி வந்தது. நிதி நெருக்கடியில் சிக்கிய இந்த நிறுவனத்தை, 50 லட்சம் ரூபாய்க்கு, " யங் இந்தியன்ஸ் " நிறுவனம் வாங்கியது.  இந்தியன்ஸ் நிறுவனத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் முக்கிய பங்குதாரர்களாக உள்ளனர்.

ஏ.ஜே.எல்., நிறுவனத்தின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை பறிக்கும் வகையில், இந்த பரிவர்த்தனை நடந்ததாக, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, 2014ல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை, டில்லியில் உள்ள பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. இதனடிப்படையில், இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறை, 2021ல் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல், அக்கட்சியின் வெளிநாட்டு பிரிவு தலைவர் சாம் பிட்ரோடா, சுமன்துபே உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. பத்தாண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் வழக்கை விரைந்து விசாரணை நடத்த பாஜக அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula