தேனி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பொட்டிபுரம் கிராமத்திலுள்ள மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதையொட்டி மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அணுசக்தி மற்றும் விண்வெளி துறை இணை அமைச்சர் ஜித்தேந்தர சிங் எழுத்து பூர்வமாக பதிலளித்தது நினைவிருக்கலாம். இந்த ஆய்வு மையம் அமைக்கப்பட்டால் சுற்றுச் சூழலுக்கும் பல்லுயிர் பெருக்கச் சூழலுக்கும் பெரும் பின்னடைவு ஏற்படும் என்று சூழியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகில் உள்ள பொட்டிபுரம் பகுதியில் ( மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில்) நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுப்பு. மேற்கு தொடர்ச்சி மலையின் பாதுகாப்பு தான் மிக முக்கியம் என உச்ச நீதி மன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல். பூவுலகின் நண்பர்கள் குழு உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.