தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள நகர்புற் உள்ளாட்சித் தேர்தல்களில், பாஜக தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
பெப்ரவரி 19ந் திகதி , தமிழகத்தின் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஒரேகட்டமாக நடைபெற உள்ளது.
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாடின்மை காரணமாக, இக் கூட்டணி முறிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் இன்று வெளியாக உள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.