சேலம், தருமபுரி மாவட்டங்களில் இருநாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்கிறார்.
அதன் ஒரு பகுதியாக நேற்று (செப்டம்பர் 29) சேலம் மாவட்டத்தில் தொழிலதிபர்கள், தொழில் முனைவோர் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினருடன் ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டார். அதன் பின்னர் அவர் தருமபுரி மாவட்டத்திற்கு புறப்பட்டு சென்றார்.தொப்பூர் வழியாக தருமபுரி சென்ற அவர் பயணத்தின் நடுவே அதியமான்கோட்டை காவல் நிலையத்தின் உள்ளே திடீரென நுழைந்து வழக்குகள் பதிவு, விசாரணை குறித்து கேட்டறிந்ததோடு கோப்புகளை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது ஐ.ஜி. சுதாகர் ஏ.டி.ஜி.பி. தாமரைக்கண்ணன் ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளார் கலைச்செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.முதல்வரின் வருகையை சற்றும் எதிர்பாராததால் அதியமான்கோட்டை காவல் நிலைய போலீசார் சற்று பதற்றம் அடைந்ததுடன், அந்த போலீஸ் நிலையமே நேற்றிரவு பரபரப்புடன் காணப்பட்டது.