சென்னையில் பொது மக்களுக்குத் தடுப்பூசி போடப்படுவது கடந்த மூன்று நாட்களாக இடை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அது இப்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பற்றாக்குறை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட இப்பணி, தற்போது தடுப்பூசிகள் வந்ததால் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. சென்னை மாநகராட்சியிலுள்ள 15 மண்டலங்களில் சிறப்பு தடுப்பூசி முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவற்றின் மூலம், இன்று 12,000 டோஸ் தடுப்பூசிகள் போடத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அறிய வருகிறது.
ஆன்லைன் முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், நேரில் வருவோருக்கு மட்டும், டோக்கன் அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகளும் இத் திட்டத்தின் கீழ் போடப்படுவதாகவும், சென்னையில் இதுவரை 26லட்சத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.