117-ல் தியாகராய ரோட்டில் உள்ள அம்மா உணவகத்தை இடிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
சென்னையில் முதன் முதலில் தொடங்கப்பட்ட இத்திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் விரிவுபடுத்தப்பட்டது.
சென்னையில் மட்டும் வார்டுக்கு இரண்டு என மொத்தம் 407 அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டது. பொது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்த அம்மா உணவகங்கள் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு லாப-நஷ்டம் பார்க்கப்படுவதால் இப்போது நஷ்டம் ஏற்படும் அம்மா உணவகங்கள் மூடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் சென்னையில் இதுவரை 14 அம்மா உணவகங்கள் மூடப்பட்டதால் 393 அம்மா உணவகங்கள்தான் இப்போது செயல்பட்டு வருகிறது. தி.நகரில் வார்டு 117-ல் தியாகராய ரோட்டில் உள்ள அம்மா உணவகத்தை இடிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
அவ்வாறு இடிக்கப்படும் பட்சத்தில் அருகில் உள்ள மாநகராட்சி கட்டிடத்தில் அம்மா உணவகம் செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஏழை-எளிய மக்கள் பயனடைந்து வந்த அம்மா உணவகங்கள் திறம்பட நடத்த முடியாமல் போனதற்கு என்ன காரணம் என்பதை அறிந்து அதை அரசு சரி செய்ய வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.