இங்கிலாந்திற்று, ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் நோர்வேயில் இருந்து வருபவர்களுக்கான நுழைவு விதிகளை எளிதாக்குவதாக இங்கிலாந்து அரசு நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளது.
மேற்குறித்த மூன்று நாடுகளிலுமிருந்து வரும் பயணிகளுக்கு, முன்பு இங்கிலாந்து அரசாங்கத்தால் பயணக்கட்டுப்பாடுகள் இருந்தன. முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே கட்டாய தனிமைப்படுத்தலை தவிர்க்க முடியும். தற்போது இந்த மூன்று நாட்டின் பயணிகளும், இங்கிலாந்துக்குள் நுழைவதற்கு முன்னும் பின்னும் கோவிட் -19 சோதனைகளை மட்டுமே எடுடுத்தால் போதுமானது, சுய தனிமைப்படுத்த வேண்டியதில்லை. ஆயினும் அவர்கள் நாட்டிற்குள் வந்த பிறகு இரண்டு நாட்களுக்குள் கோவிட் சோதனைகளை முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும். 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மட்டுமே அவற்றை எடுக்க தேவையில்லை.
சோதனையின் போது நேர்மறை சோதனை செய்தால் மட்டுமே அந்த பயணிகள் சுய தனிமைப்படுத்தப்பட வேண்டும். இந்த மாற்றம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு அமலுக்கு வருகிறது என புதன்கிழமை இரவு பிரிட்டனின் போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னதாக ஜெர்மனி, நார்வே அல்லது ஆஸ்திரியாவிலிருந்து இங்கிலாந்துக்கு வருபவர்கள் முந்தைய விதிகளுக்கு உட்பட்டு, தனிமைப்படுத்தல் தேவைப்படும் என்பது கவனத்திற்குரியது.