இத்தாலியில் இந்தவார இறுதியிலான இன்று, மற்றும் நாளை ஞாயிறு ஆகிய நாட்களில், இத்தாலி எதிர்கொள்ளக் கூடிய போக்குவரத்து நெரிசல் மற்றும் அதிக வெப்பநிலை குறித்து இத்தாலிய அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையின்படி, வரவிருக்கும் வாரத்தில் இத்தாலி முழுவதும் வெப்பநிலை 30 பாயைினை எட்டும் எனவும், தெற்கு இத்தாலியின் பல பகுதிகளில் இது 40 பாகைவரையிலும் உயரக்கூடும் என எச்சரித்துள்ளார்கள்.
இதேவேளை இத்தாலியை நோக்கிய சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகை, அதன் உச்சத்தை அடைந்துள்ளது எனவும், ஆகஸ்ட் 7-8 வார இறுதி நாட்களில், பல நெடுஞ்சாலைகளிலும், அதிக போக்குவரத்து இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
A26 வோல்ட்ரி - கிராவெல்லோனா டோஸ், ஜெனோவாவை நோக்கி
A8 / A9 மிலன் - லாகி, செஸ்டோ காலெண்டே மற்றும் வலிகோ ப்ரோகெடாவை நோக்கி
A4 வெனிஸ் - நோக்கி
A27 வெனிஸ் - பெல்லுனோ
A22 ப்ரென்னரை நோக்கி
A12 தெற்கு திசையில் ரோம்-சிவிடவெச்சியா, ஆகிய சாலைகளில் போக்கு வரத்து நெரிசல் ஏற்படலாமனெ எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வாகன நெரிசலைக் குறைப்பதற்காக, கனரக வாகனங்களுக்கு இன்று ஆகஸ்ட் 7 சனிக்கிழமை இரவு 8-4 மணி வரையிலும், ஆகஸ்ட் 8 ஞாயிற்றுக்கிழமை இரவு 7-10 மணி வரையிலும் தடை இருக்கும் என்றும், வாகனப் போக்குவரத்தை எளிதாக்குவதற்காக சாலைப் பணிகள் குறைந்தபட்சமாக குறைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கோடைகால விடுமுறையான ஃபெராகோஸ்டோ நாட்களில் இத்தாலி முழுவதும் குறிப்பாக பிஸியான சாலைகள் முன்னறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ம் திகதி, ஞாயிற்றுக்கிழமை ஃபெராகோஸ்டோ வாகும்.