சுவிற்சர்லாந்து நேற்று திங்கட்கிழமை ஜூன் 7 தனது கோவிட் -19 சான்றிதழின் நிறைவு வடிவத்தை வெளியிட்டது, இச் சான்றிதழ் எதிர்காலத்தில் பயணம் மற்றும் நிகழ்வுகளுக்கான சில உரிமைகள் மற்றும் சலுகைகளை வழங்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கோவிட் -19 தடுப்பூசி பெற்றிருப்பவர்கள், நோயிலிருந்து மீண்டு வந்தவர்கள் அல்லது எதிர்மறையை சோதித்தவர்கள் என்பதற்கான ஆவண ஆதாரங்களை வழங்கும், இந்தப் புதிய அனுமதிச் சான்றிதழ், கோவிட் -19 சான்றிதழ் அல்லது கோவிட் -19 பாஸ் அல்லது கிரீன் பாஸ் என அழைக்கப்படுவதுடன், இது காகிதம் மற்றும் டிஜிட்டல் வடிவத்தில், மொபைல் சாதனத்திலிருந்து எடுத்துச் செல்லக்கூடிய மற்றும் காண்பிக்கக்கூடிய QR குறியீடாகவோ இருக்கும்.
சான்றிதழுக்குரியவரின் முதல் மற்றும் கடைசி பெயர்கள், பிறந்த திகதி மற்றும் சான்றிதழ் எண், அவர்களின் COVID-19 தடுப்பூசி, மீட்பு அல்லது எதிர்மறை பி.சி.ஆர் அல்லது விரைவான ஆன்டிஜென் சோதனை பற்றிய விவரங்கள் உள்ள இச் சான்றிதழில் மோசடி செய்வதைத் தடுக்க உத்தியோகபூர்வ அரசாங்க மின்னணு கையொப்பமும் இருக்கும்.
சான்றிதழின் பாவனையின் போது, உரித்தாளர்கள் தங்கள் ஐடி அல்லது பாஸ்போர்ட்டையும் காட்ட வேண்டும். இதன் டிஜிட்டல் அமைப்பு குறிப்பாக ஒரு சேமிப்பு பயன்பாடு, மற்றும் சரிபார்ப்பு விண்ணப்பம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது எனத் தெரிவித்துள்ள அரசு இந்த இரண்டு பயன்பாடுகளும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அல்லது கூகிள் பிளேயில் இலவசமாகக் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளது.
தடுப்பூசி மையங்கள், மருத்துவ நடைமுறைகள், மருத்துவமனைகள், மருந்தகங்கள், சோதனை மையங்கள் மற்றும் ஆய்வகங்கள் என்பவற்றின் சோதனைகளின் போது இச் சான்றிதழைப்பெறமுடியும். ஏற்கனவே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருப்பவர்கள், சான்றிதழைப் பெற மாநில அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள வேண்டும்.
எதிர்மறையைச் சோதிக்கும் நபர்களுக்கான சான்றிதழின் நோய் எதிர்ப்பு சக்தி நிலைக் காலம் பாவனையாளர் பெறும் சோதனை வகையைப் பொறுத்து அமையும். பி.சி.ஆர் சோதனைகள் 72 மணிநேரத்திற்கும், ஆன்டிஜென் சோதனைகள் 24 மணி நேரத்திற்கும் செல்லுபடியாகும்.
சுவிஸ் நோய் எதிர்ப்பு சக்தி பாஸ் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பின்னர் இணைக்கப்படும் எனவும், சுவிற்சர்லாந்தின் கோவிட் சான்றிதழ் ஐரோப்பிய ஒன்றிய டிஜிட்டல் கோவிட் சான்றிதழுடன் இணக்கமாக செயல்படுத்தப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய டிஜிட்டல் கோவிட் சான்றிதழ் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஷெங்கன் மாநிலங்களுக்குள் உள்ள நபர்களின் இலவச இயக்கத்திற்கு உதவும் எனஐரோப்பிய ஒன்றியம் ஏலவே தெரிவித்திருப்பதனால், இந்த பாஸ் ஐரோப்பாவிற்குள் சுவிஸ் பிரஜைகளின் இயக்கத்தை இலகுவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.