சுவிற்சர்லாந்தில் இவ்வருடக் கோடைக்கால வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என அறிய வருகிறது.
இன்று ஞாயிறு வாராந்தரப் பத்திரிகை ஒன்றுக்கு SRF Meteo இன் தலைமை ஆசிரியர் தாமஸ் புச்செலி வழங்கிய செவ்வியில், " சுவிற்சர்லாந்தில் முன்பை விட இரண்டு முதல் ஐந்து டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக உயரலாம். 40 டிகிரி வரை இருக்கலாம்." எனத் தெரிவித்துள்ளார்.
இத்தாலியில் குரங்கு அம்மை தொற்று !
சுவிற்சர்லாந்தில் வெப்பத்தின் பதிவு 2003 கோடையில் வெப்ப அலையின் போது கிறபுண்டனில் 41.5 டிகிரி பதிவு செய்யப்பட்டது என்பது இதுவரையில் அதிகமான பதிவாக உள்ளது. மே மாதத்தில் சில இடங்களில் அளவிடப்பட்ட அதிக வெப்பநிலை இதற்கு முன் பதிவு செய்யப்படவில்லை.
சுவிட்சர்லாந்தில் பல இடங்களில், அளவீடுகள் தொடங்கியதிலிருந்து 25 டிகிரிக்கும் அதிகமான கோடை நாட்களின் எண்ணிக்கை நடைமுறையில் இரட்டிப்பாகியுள்ளது. 30 டிகிரிக்கு மேல் உள்ள வெப்ப நிலை இந்த நாட்களில் காணப்படுகிறது.