பல ஐரோப்பிய நாடுகளில் கட்டாயப்படுத்தப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் மற்றும் கோவிட்-19 பாஸ்களுக்கு எதிராக எதிர்ப்பாளர்கள் பேரணி நடத்திவருகின்றனர்.
ஆஸ்திரிய அரசாங்கம் திங்கள்கிழமை முதல் நாடு தழுவிய முடக்கத்தை அறிவித்ததை அடுத்து, பல்லாயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் வியன்னா வழியாக அணிவகுத்துச் சென்றனர்.
இதேவேளை நேற்று சனிக்கிழமை வைரஸ் கட்டுப்பாடுகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் சுவிட்சர்லாந்து, குரோஷியா, இத்தாலி, வடக்கு அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும் நடைபெற்றன.
மேலும் பொலிசாருக்கு எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல்களும் இடம்பெற்று வருகிறது. நெதர்லாந்து ரோட்டர்டாமில் இடம்பெற்றுவரும் போராட்டத்தின் போது டச்சு பொலிசார் எதிர்ப்பாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதியதியதை தொடர்ந்து, வெடித்த கலவரத்தில் ஏழு பேர் காயமடைந்தனர்.
பல ஐரோப்பிய நாடுகளில் உணவகங்களுக்குள் நுழைய கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் மற்றும் கட்டாய COVID-19 பாஸ்களுக்கு எதிராக எதிர்ப்பாளர்கள் அணிதிரண்டனர்.
சமீபத்திய வாரங்களில் சராசரி தினசரி இறப்புகள் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதால் ஆஸ்திரிய முடக்கப்பட்டு வருகிறது மற்றும் பெரிதும் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகள் தீவிர சிகிச்சை பிரிவுகள் நிரம்பிவருவதாக எச்சரித்துள்ளன.
இந்த முடக்கம் குறைந்தது 10 நாட்கள் நீடிக்கும் என்றபோதும் அது 20நாட்கள் வரை செல்லலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அத்தியாவசிய பொருட்கள் வாங்குவது, மருத்துவரிடம் செல்வது அல்லது உடற்பயிற்சி செய்வது உள்ளிட்ட குறிப்பிட்ட காரணங்களுக்காக மட்டுமே மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேற முடியும் எனும் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதுடன் பிப்ரவரி 1 முதல் தடுப்பூசிகளை அரசாங்கம் கட்டாயமாக்கவிருப்பதும் குறிப்பிடதக்கது.