இத்தாலியில் வரும் அக்டோபர் 15 முதல், அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் செயலாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் ' தடுப்பூசிச் சான்றிதழ்' தேவை கட்டாயமாகிறது. இத்தாலியை "பாதுகாப்பு நிலையில்" வைத்திருக்கும் நடவடிக்கையாக இத்தாலியப் பிரதமர் இதனை இன்று அறிவித்தார்.
பணியிடங்களுக்கான ' கிறீன்பாஸ் " தேவையினைக் கட்டாயமாக்கும் முதல் ஐரோப்பிய நாடாக இத்தாலி இந்த அறிவிப்பினைச் செய்துள்ளது.
சிறீதரனின் குறளி வித்தை! (புருஜோத்தமன் தங்கமயில்)
இதன்படி ஒரு தொழிற்சாலை, அலுவலகம், தொழில்முறை ஸ்டுடியோ மற்றும் வேறு எந்த பணியிடத்திற்கும் இது கட்டாயமாகிறது. இந்த விதியினை மீறுவோர் மீது 1000 யூரோக்கள் வரை குற்றப்பணம் அறவிடப்படலாம். இத்திட்டம் குறித்து, தொழிற்சங்கத் தலைவர்களுடனான மோதல் இறுக்கமாகவும் கசப்பாகவும் இருந்த போதும், பிரதமர் மரியோ டிராகி நேர்முகமாவே இத்திட்டத்தை வரவேற்று அறிவித்தார்.
சுவிற்சர்லாந்தில் 7,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் !
இந்த அறிவிப்பிற்கான முக்கிய காரணம், குளிர் வந்து தொற்றுநோய் தலை தூக்கும் முன், தடுப்பூசிகளை முடிந்தவரை அதிகரிக்கவும், மூன்று அல்லது நான்கு வாரங்களில் நாடு "பாதுகாப்பான மண்டலத்தில்" நுழைய அனுமதிக்கும் அளவுக்கு அதிகமான நோய்த்தடுப்புக்கான வழிமுறைகளை அடைய வேண்டும் எனும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறார் தேவையானதை செய்ய பயப்படாத பிரதமர் டிராகியின் குறிக்கோளாக இருக்கிறது என செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பன்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு தாக்குதல் அச்சுறுத்தல்
தொழிற்சங்கங்களுக்கு பிரதமர் அடிப்படை தத்துவத்தை விளக்கும்போது, "முன்னிலையில் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதன் மூலம், நாங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதனாலே கிரீன் பாஸை நீட்டிக்க முடிவு செய்தோம், ஏனெனில் இது வேலை செய்யும், மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு கண்காணிக்கப்படுகிறது " என்றார்.