சுவிற்சர்லாந்தில் 4 முதல் 15 வயதுக்குட்பட்ட 7,353 பள்ளி மாணவர்கள் நாடு முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக சமீபத்திய தகவல்கள் சில தெரிவிக்கின்றன.
ஆயினும், இதன் உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் எனவும், சூரிச் போன்ற பெரிய மாநிலங்களின் புள்ளிவிவரங்கள், மற்றும் கிராபுண்டன் மாநிலங்களின் புள்ளி விபரங்கள் முழுமையாக இல்லை எனவும், மேலும் சில மாநிலங்கள் 12 வயதுக்குட்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட தொற்று விபரங்களை பதிவு செய்யவில்லை எனவும் வேறு சில செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பன்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு தாக்குதல் அச்சுறுத்தல்
சென்ற சில வாரங்களுக்கு முன்னதாக, கோடை விடுமுறை முடிவடைந்ததிலிருந்து 10 முதல் 19 வயதுடையவர்களின் தொற்று எண்ணிக்கை குறிப்பாக கடுமையாக உயர்ந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை சுவிற்சர்லாந்தில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை மெதுவாக உயர்ந்து வருவதாகவும், கடந்த திங்களன்று அமலுக்கு வந்த கோவிட் சான்றிதழின் நீட்டிப்பு, அதிக எண்ணிக்கையிலான மக்கள் தடுப்பூசிகளை பெறத் தூண்டியுள்ளது எனவும் அறியவருகிறது.
ஆகஸ்ட் 31 அன்று, சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையில் 50.92 சதவிகிதம் மட்டுமே முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நிலையில், அந்த எண்ணிக்கை நேற்று புதன்கிழமை வரையில், 53.03 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது என்று பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகம் தெரிவித்துள்ளது.ஐரோப்பிய நாடுகளில் இது 60 சதவிகிதத்தை தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆயினும் சுவிற்சர்லாந்தில் அடுத்த சில வாரங்களுக்குள் தடுப்பூசிகளின் வேகம் அதிகரிக்கும் என்று சுகாதார அதிகாரிகள் நம்புகின்றனர்