டென்மார்க் தலைநகர் கோப்பனேகனின் கேந்திர முக்கியத்துவம் மிக்க பகுதியில், நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில், மூவர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
கோப்பன்ஹேகன் சிட்டி சென்டர் மற்றும் விமான நிலையத்திற்கு இடையே உள்ள ஃபீல்டின் ஷாப்பிங் மாலில் இந்தப் பயங்கரம் நிகழ்ந்துள்ளது. செய்தியாளர் கூட்டத்தில் கோபன்ஹேகன் காவல்துறைத் தலைவர் சோரன் தாமஸ்சென் மூன்று பேர் இறந்ததை உறுதிப்படுத்தினார். மேலும் பலர் காயமடைந்தனர் மற்றும் மூவர் ஆபத்தான நிலையில் உள்ளனர் எனவும், பாதிக்கப்பட்டவர்களில் நாற்பது வயதுடைய ஒரு ஆண் மற்றும் இரண்டு இளவயதினர்களில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என்று தாமஸ்சென் கூறியதாக செய்தித் தகவல்கள் தெரிவிக்கிறது.
துப்பாக்கிச் சூட்டினை நடத்தியதாக 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரைத் தவிர, கூடுதல் துப்பாக்கி ஏந்தியவர்கள் இல்லை என்பதை உறுதி செய்வதற்காக தாங்கள் ஒரு பெரிய நடவடிக்கையைத் தொடங்கியதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும் சந்தேகநபர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் எனவும் முதற்கட்டத் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"எங்கள் அழகான மற்றும் பொதுவாக மிகவும் பாதுகாப்பான மூலதனம் ஒரு நொடியில் மாற்றப்பட்டது " எனப் பிரதமர் மெட் ஃபிரடெரிக்சன் ஒரு அறிக்கையில் கூறினார். "பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் மற்றும் சோகத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் " என்று டேனிஷ் அரச குடும்பம் தெரிவித்துள்ளது.