திருமணமான நாளிலிருந்து ஆயிஷா கடும் சித்திரவதைகளுக்கு ஆளாகியதுடன் அந்தச் சித்திரவதையைத் தாங்க முடியாமல் கணவர் வீட்டிலிருந்து தப்பித்தார்.
எனினும் ஆயிஷாவின் தந்தை, அவரை மீண்டும் கணவர் தரப்பிடமே ஒப்படைத்து விட, அவர்கள் ஆயிஷாவை அருகிலுள்ள மலையின் உச்சிக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு அவரது காதுகளையும், மூக்கையும் அறுத்துவிட்டு, அப்படியே குற்றுயிராகக் கிடக்க விட்டு அவ்விடத்தை விட்டு அகன்றனர்.. அங்கிருந்து காப்பாற்றப்பட்ட ஆயிஷா அமெரிக்காவிற்குக் கொண்டு வரப்பட்டு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டதனால் உயிர் பிழைத்தார்.
சிகிச்சைக்குப் பிறகு ஆயிஷா இதே முகத் தோற்றத்தோடு ஒரு சாட்சியாக வாழ்கிறார். ஆப்கானிஸ்தானின் 18 வயதான பிபி ஆயிஷா என்ற இந்த பெண்ணின் புகைப்படம் ஊடகங்களில் அதிகமாக விமர்சனம் செய்யப்பட்டதுமல்லாமல் பல மில்லியன் பேரால் பார்வை இடப்பட்ட புகைப்படமாகவும் உள்ளது. தென்னாப்பிரிக்க புகைப்பட காரர் ஜோடி பியெபெர், 'டைம்' சஞ்சிகைக்காக ஆயிஷாவின் இப்புகைப்படத்தை எடுத்திருந்தார். அது இன்று உலகெங்கிலும் பேசப்படும் புகைப்படமாக உள்ளது.