2020ஆம் ஆண்டு டோக்கியோ பாராலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவில் நடைபெற்ற சிறப்பு நடன நிகழ்ச்சி ஒன்று இதுவரை யாரும் அணுகாத புதிய முயற்சியை கொண்டிருந்தது.
சிறப்பு தேவை உடைய வீரர்களுக்காக நடாத்தப்படும் பாராலிம்பிக் விளையாட்டு போட்டியை அடிப்படையாக கொண்டு சக்ரநாற்காலிகளில் அமர்ந்திருந்தவாரே 126 கலைஞர்கள் கைகளை இசைக்கேற்ப அசைத்து நடனத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த Sadeck Waff எனும் நடன இயக்குனரால் அழகாக இயக்கப்பட்ட கைதேர்ந்த' நடன அசைவுகள் மயக்கும் வண்ணம் உள்ளன.
ஓபன் பயோனிக்ஸ் மூலம் 3டி தொழிழ்நுட்பத்தில்-அச்சிடப்பட்ட, மல்டி-கிரிப் பயோனிக் "ஹீரோ ஆர்ம்" அதாவது செயற்கை கை பொருத்தப்பட்ட பிரான்சில் முதல் நபர் ஆக்ஸாண்ட்ரே பெகு என்ற 12 வயது சிறுவன் ஆவான். அச்சிறுவனின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தொடங்கப்படும் இந் நிகழ்ச்சி அடுத்ததாக பிரான்சில் (2024 இல்) வரவிருக்கும் பாராலிம்பிக் விளையாட்டு போட்டியை அடையாளப்படுத்தும் கைகளோடு முடிவடைகிறது.
இசை, உடை, ஒளி என பொருத்தமாக சேர்த்து கைகளில் ஒப்படைக்கும் நடனம் இதோ :