சொர்க்கம் இறந்த பின் அனைவரும் செல்ல விரும்பும் இடம், ஆனால் எப்படி செல்வோம் என்பது யாருக்கும் தெரியாது.
அதற்காகவே தென் ஆப்பிரிக்க நிலம் சார்ந்த கலைஞர் ஒருவர் ஏணி ஒன்றை உருவாக்கியுள்ளார்.
உயரம் ஏற நீங்கள் பயப்படாதவர் எனில் இந்த ஏணிப்படிக்கட்டில் ஏறி வான் நோக்கி சொர்க்கம் வரை செல்ல ஆசைப்படலாம். ஆனால் உண்மை எப்போதும் பொய்களால் மறைந்திருப்பது போல் இந்த ஏணிப்படியும் ஒரு மாயை சிற்பமே!
ஆம் தென்னாப்பிரிக்காவின் நிலக் கலைஞரான ஸ்டிரிஜ்டோம் வான் டெர் மெர்வே ( Strijdom van der Merwe) என்பவரே இந்த "சொர்க்கவாயில் ஏணியை உருவாக்கி உள்ளார். உண்மையில் இந்த செங்குத்து இரும்பு ஏணி வெறும் 4.5 மீட்டர் (14.8 அடி) உயரமே உள்ளது, ஆனால் வேறு கோணத்தில் பார்த்தவுடன் மேகங்களை அடையும் முடிவற்ற ஏணிபடிகளின் தொகுப்பைப் போல தோற்றமளித்து பார்வையாளர்களை ஏமாற்றுகிறது.