அதிகளவான நேர்மறை சொற்களை கொண்டிருப்பதால் சர்வதேச அளவில் ஸ்பானிஷ் மொழி உலகின் மகிழ்ச்சியான மொழியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பத்து முக்கிய மொழிகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் 10,000 சொற்களின் பகுப்பாய்வைக் கொண்ட ஒரு விரிவான மொழியியல் ஆய்வறிக்கையின் படி அனைத்து மனித மொழிகளும் உலகளாவிய நேர்மறை சார்பை வெளிப்படுத்துகின்றன என்பதை வெளிப்படுத்தியது. எனினும் ஸ்பானிஷ் மொழி அனைத்திலும் மகிழ்ச்சியான மொழியாக உருவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்பானிஷ் மொழியை தாய்மொழியாக பேசுபவர்கள்; தொடர்ந்து அதன் சொற்களஞ்சியத்தை நேர்மறை உணர்ச்சி உள்ளடக்கத்தின் மிக உயர்ந்த செறிவைக் கொண்டிருப்பதாக மதிப்பிடுகின்றனர்.
வெர்மான்ட் பல்கலைக்கழகம் மற்றும் MITER கார்ப்பரேஷனின் ஆராய்ச்சியாளர்கள், தாய்மொழி பேசுபவர்களிடம் சோகம் முதல் மகிழ்ச்சி வரை உணர்ச்சிகள் அடிப்படையில் வார்த்தைகளை மதிப்பிடுமாறு கேட்டுக்கொண்டனர். சமூக ஊடகங்கள், புத்தகங்கள், வசன வரிகள் மற்றும் பிற ஆதாரங்களில் உள்ள ஸ்பானிஷ் மொழி நூல்கள், சீன மற்றும் கொரிய போன்ற மொழிகளை விட மிக உயர்ந்த இடத்தில் உள்ளன. மேலும் ஸ்பானிஷ் மொழியில் ஒரு மொழியியல் நேர்மறையை மட்டுமல்ல, வார்த்தை பயன்பாடு பல்வேறு மொழிகளில் கலாச்சார மற்றும் உணர்ச்சி வெளிப்பாட்டை எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதையும் கண்டுபிடிப்புகள் எடுத்துக்காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.
Source: Hola!