free website hit counter

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

வினோதம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

உலகமே எதிர்பார்க்கும் ஒரு ப்ரேக்கிங் நியூஸ் இது. அதை ஒரு ஒன்பது வயதுச் சிறுமி தனது எண்ணத்திலும், கைவண்ணத்திலும் சொல்லுவது இந்தக் கானொலியின் சிறப்பு.

கொரோனா வைரஸின் தாக்கம் பற்றிய துயரச் செய்திகளால் துவண்டிருக்கும் மனங்களை ஒரு கணம் துள்ளிக் குதிக்கவைக்கும் செய்தி. ஓடித்திரியும் பிள்ளைகளை வீட்டுக்குள் ஒடுக்கி வைப்பது எவ்வளவு பெரிய கொடுமை. அதன் வேதனையை, செய்தியின் போக்கில் சொல்லிவிடுவதுதான் இந்தச் செய்தித் தொகுப்பின் உச்சம் என்பேன்.

வீட்டுக்குள் இருக்கும் குழந்தைகளை உற்சாகப்படுத்தலாம் என இரு தினங்களுக்கு முன் ஒரு அறிவிப்பினைச் செய்திருந்தோம். ஆனால் இறப்புக்களின் எண்ணிக்கை தேடலில் ஆரவம் அதிகமாகிவிட்ட உலகில் அதற்கெல்லாம் நேரம் இல்லை என்றாகிப் போய்விட்டது. அவ்வாறான வேளையில்தான் சங்கவியின் இந்தச் செய்தி எமக்குக் கிடைத்தது. இறுதி வரை பாருங்கள். உங்கள் வீட்டுகளுக்குள்ளும் முடங்கி விட்ட சிறுவர்கள் ஏதோ ஒன்றை இவ்வாறு செய்வார்கள். இருந்தால் எங்களுக்கு அனுப்புங்கள். நாங்களும் பார்ப்போம். நாலுபேருக்கு காட்டியும் மகிழ்வோம்...

ஆக்கம் : செல்வி.சங்கவி மயூரன்

வயது: 9

பாசல், சுவிற்சர்லாந்து.

உங்கள் வீட்டுச் சுட்டிகள் செய்ததை பகிர்வதற்கு இணைப்பினை அழுத்தி விபரம் பெறுங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula