பல வாரங்களாக முடக்கப்பட்டு வீட்டில் இருப்பவர்கள், உபயோகமாக இருப்பதற்கு சில வழிமுறை அம்சங்கள் இணையத்தில் வெளியாகிவருகிறது. அவற்றில் சிலவற்றை தொகுத்து வழங்க முயற்சித்திருக்கிறோம்.
சுற்றுலா வாசிகள், விடுமுறை நாட்களை குறைந்தபட்சம் வெளி இடங்களிலே செலவு செய்ய விரும்புவோர் பல இடங்களை பார்வையிட தவறியோர்களுக்கான சில இணையத்தள ஏற்பாடுகள் இவை.
1. அறிவியல் சுற்றுலா
விடுமுறை நாட்களில் வெளியே சுற்றுலா செல்லமுடியாதவர்கள் வீட்டிலேயே வெர்சுவல் சுற்றுலா (செல்லலாம்) பார்க்கலாம். கலை மற்றும் அருங்காட்சியக ஆர்வலர்கள் உலகில் பிரபல்யமான அருங்காட்சியங்களை கூகிள் ஆர்ட்ஸ் மற்றும் கலாச்சார இணையத்தளம் வழியே பார்வையிடலாம்.
இந்த டிஜிட்டல் தளம் 1,200+ க்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்கள் மற்றும் கலைக்காட்சியகங்களின் தொகுப்பைக் கொண்டுள்ளது, வைஃபை உள்ள எவரும் தங்கள் ஓய்வு நேரத்தில் பார்வையிடலாம். வரலாற்று பிரியர்கள், ஆக்கதிதிறனாளர்கள் மற்றும் வீட்டிலிருந்து கல்வி கற்போருக்கும் இது சிறந்த தேர்வாக அமையும்.
முதல் 10 அருங்காட்சியகங்களின் பட்டியல் :இணைப்பு
2. விடுமுறை சுற்றுலா / இயற்கைச்சுற்றுலா
இதே கூகிள் ஆர்ட்ஸ் மற்றும் கலாச்சார டிஜிட்டல் இணையம் சற்று வெளியே மரங்கள் ஆறுகள் பாறைகள் என இயற்கையோடு இணைந்த சுற்றுலா செல்ல விரும்புவோர்களுக்கு அமெரிக்காவின் தேசிய பூங்காக்களை பார்வையிட தருகிறது. சில சுற்றுலா வழிகாட்டியுடன் கூடிய 5 வெவ்வேறு விதமான இடங்களை வித்தியாசமான அனுபவங்களாக உருவாக்கியுள்ளது கூகிள்.
3. உயிரியல் சுற்றுலா
விலங்கினங்கள், பறவை இனங்கள், கடல்வாழ் உயிரினங்கள் என்பவற்றை காணப்போகும் பிரியர்களுக்காக சில காட்சியகங்கள், நேரடி இணையவழி பிரவாகத்தினை ஏற்பாடு செய்திருந்தன. அழகிய ஆப்பிரிக்க பெங்குவினின் நடை, மீன் தொட்டியைச் சுற்றி சறுக்கும் சுறாக்கள் என பலவகை அறிய காட்சிகளை இலவச நேரடி அலையாக தருகிறது Monterey Bay எனும் அஃகூரியம். இணைப்பு
இதைதவிர சில விலங்கின வாழ் மிருகங்களையும் நேரடி பிரவாகமாக தருகின்றன கீழ்வரும் இணையத்தளங்கள் :
வீணான நேர செலவினை இவ்வாறான உபயோகமான நேர செலவினமாக மாற்றியமைத்தால் மனமும் உடலும் உற்சாகமடைவதோடு அறிவுத்திறனையும் வளர்த்துக்கொள்ளலாம். மேலும் நீங்கள் சென்று வந்த சுவாரஸ்யமான பயண அனுபவங்களை கட்டுரையாகவோ அல்லது புகைப்பட காணொளி காட்சிகளாகவோ எம்முடன் பகிர்ந்து கொள்ளலாம். அதற்கான விபரங்களை இவ் இணைப்பை அழுத்தி தெரிந்துகொள்ளலாம்.
இணையத்தோடும் தொடுதிரை சாதனங்களோடும் அதிகம் மெனக்கிடாதவர்களுக்கான வழிமுறைகள் அடுத்த பகுதியில்..