2021 ஆம் ஆண்டின் முதல் சூப்பர் சந்திர கிரகண நிகழ்வாக இன்று நிகழப்போகும் சந்திர கிரணம் இருக்க போகிறது எனலாம்.
சூப்பர் மூன் எனும் சிவப்பு நிறமுடன் கூடிய முழு சந்திர கிரகணம் என இரண்டையும் ஒரே நேரத்தில் காணும் வாய்ப்பை பெறவுள்ளோம்.
சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகியவை ஒரே நேர் கோட்டில் இணையும் போது சந்திரன் மற்றும் சூரிய கிரகணங்களுக்கு வழிவகுக்குகிறது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி இவ்வாறு சூரியனின் ஒளியின் வழியில் வந்து அதன் நிழலை நிலவின் மீது செலுத்தும்போது சந்திர கிரகணம் நிகழ்கிறது.
தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா, பசிபிக் பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலை உள்ளடக்கிய பகுதிகளிலும் சந்திர கிரகணம் தெரியும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.
மே 26 திகதியான இன்று கிரகணத்தின் பகுதி கட்டம் மதியம் 3:15 மணிக்கு IST தொடங்கி மாலை 6:23 மணிக்கு IST உடன் முடிவடையும். மொத்த கட்டம் மாலை 4:39 மணிக்கு தொடங்கி மாலை 4:58 மணிக்கு முடிவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வேளை சந்திரனின் 97.9 சதவீதம் பூமியின் நிழலால் மூடப்பட்டிருக்கும்.
இந்த அற்புதமான நிகழ்வை இந்திய மக்களால் குறிப்பிட்ட பகுதிகளில் காணலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. எங்கெங்கு என்ன நேரங்களில் காணலாம் என விளக்கம் தரும் படம் இதோ :