உலகமெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களின் தினமாக 1890 ஆண்டிலிருந்து மே 1ம் நாளில் கொண்டாடப்பட்டு வரும் உழைப்பாளர் தினம், கடந்த இரு ஆண்டுகளாக, கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காரணமாக, களையிழந்து போயுள்ளது.
இந்நிலையில் இன்று இணையவழி உரையாடல்கள், கருதரங்குகள் என்ற வகையில் நினைவு கொள்ளப்பட்டு வருகின்றன. கூகிள் தளம், தனது முகப்பில் தொழிலாளர் தினத்துக்கான சிறப்பு முகப்பிளை வெளியிட்டுள்ளது. அதிலே பல்வேறு தொழிலாளர்கள், பேரிடர் காலத்திலும் முக கவசங்களுடன் பணியாற்றுவதைக் குறிக்கும் வகையில் படங்களை வரைந்து, தொழிலாளர்களுக்குச் சிறப்புச் சேர்த்துள்ளது.